இளைஞர் படையணி ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய காரணமாக காணப்பட்ட இளைஞர் சமூகத்தை நேர்மறையான எண்ணக்கருக்களால் மற்றும் தொழில் திறன்களால் வலுவூட்டுவதன் மூலம் தேசிய அபிவிருத்தி முன்னெடுப்பில் பங்காற்ற வைக்கும் இலக்குக்குள்ளான பணியை தற்காலத்திலும் அவ்வாறே எங்கள் மீது சாட்டப்பட்டுள்ளது டன், அன்றையை விட இன்று தேசிய இளைஞர் படையணி எதிர்பார்த்த பெறுபேறுகளை தேசத்துக்கு வழங்க வேண்டிய காலம் எழுந்து விட்டது என நான் நம்புகின்றேன்.
மேற்கூறப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்ளும் முகமாக வலுவான ஊழியர் படையொன்றை நாட்டிற்கு தேவையாகும். ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் ஆளுமையுடன் கூடிய வலுவான ஊழியர் படையொன்றை கட்டி எழுப்புவதற்கு தேசிய இளைஞர் படையணிக்கு உள்ள இயலுமை, கடமை மற்றும் பொறுப்பை சுலபமாக கருத முடியாது.