அதாவது தேசிய இளைஞர் படையணி இளைஞர்களுக்காக காணப்படும் இன்னுமொரு நிறுவனம் மாத்திரம் என்பதை விட அதனை இளம் பிரஜைகள் நடமாடும் நிறுவனமாக மாற்ற வேண்டியிருக்கின்றது. நாம் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மக்கள் ஆணையின் நேரடி பாகமொன்றாக இலங்கையின் இளம் தலைமுறையினர் காணப்பட்டனர். 83இலட்சங்களான இளம் தலைமுறையினர் எதுவித பாகுபாடுகளுமின்றி நாட்டின் பொருளாதார அரசியல் சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சிக்கு பங்காளிகளாக ஆக்கிக் கொள்வது எமது இளைஞர் கொள்கை பிரகடனத்தின் நோக்கமாகும். அதற்காக இலங்கையின் இளம் தலைமுறையினர் அறிவு மனப்பாங்கு மற்றும் ஆற்றல்களால் முன்னேறிய ஆக்கபூர்வமான ஒற்றுணர்வுமிக்க பிரிவினராக கட்டியெழுப்புவதில் தேசிய இளைஞர் படையணிக்கு பணிப்பொறுப்பு ஒன்றை செய்ய முடியும் என்பது எனதுநம்பிக்கையாகும்.
விசேடமாக உலகளாவியஇளம் தலைமுறையினர்களுடன் இணைவாக முன்னேறுகின்ற உலகளாவிய தொழிற்சந்தை மற்றும் விளையாட்டு மைதானத்தில் இலங்கையின் நாமத்தை பதிக்கக்கூடிய நவீன இளைஞன் ஒருவனை உருவாக்குவது எமது முதலாவதும் பிரதானமானதுமான இலக்காகும்.
“வளமான நாடு அழகான வாழ்க்கை” என்பதனுள் நவீன இளைஞனாக அரசியல் சமூக மற்றும் கலாச்சார துறையின் தீர்மானம் எடுக்கும் மற்றும் அவற்றை செயல்படுத்தும் செயல்முறைகள் நேரடியாக பங்கு மற்றும் இளம் தலைமுறையினர்கள் ஊடாக எதிர்கால தலைமைத்துவத்திற்கு அவர்களை அறிவால் மற்றும் அனுபவத்தால் பயிற்றுவிப்பது எமது இலக்காகும். அதற்காக தேசிய இளைஞர் படையணி தனது அதிகூடிய பங்களிப்பை வழங்குவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும். நாம் அனைவரும் இணைந்து அதற்காக செயல்படுவதில் அந்த குறிக்கோள் நிஜமாக்கிக் கொள்ளலாம்.
வெற்றி!