திறன்களுடன் கூடிய இளைஞரை உருவாக்குவதற்கு மென்திறன் மற்றும் ஆளுமை விருத்தி அடிப்படை பாடநெறி போன்றே, எதிர்கால தொழில் சந்தையை இலக்காக கொண்டு தொழிற் பயிற்சி பாடநெறிகளுக்கு புலமை பரிசுகளை வழங்குவதன் மூலம் தேசிய இளைஞர் படையணி ஆற்றும் பங்கு பாராட்டப்பட வேண்டியது.அதேபோன்று சமூகத்திற்காக மொழிப் பாடநெறி, விளையாட்டுத் திறன் விருத்தி நிகழ்ச்சி திட்டங்கள், அழகியல் கலை பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் ஆகிய புதிய பாடநெறிகள் மற்றும் நிகழ்ச்சி திட்டங்களை அறிமுகம் செய்தல் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு திறன் சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் அவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து தேசிய இளைஞர் படையணி இளைஞர் சமூகத்துக்கு தமது வாழ்க்கை பாதையை மாற்றிக் கொள்வதற்கான வழிகாட்டுதல்களை செய்கின்றது.
20 ஆண்டுகால குறுகிய வரலாற்றைக் கொண்டிருந்தாலும், நிறுவன ரீதியில் பல்வேறு வெற்றிகளை நிறுவி முன்னே செல்லும் தேசிய இளைஞர் படையணியின் எதிர்கால நடவடிக்கைகள் சகலவிதத்திலும் வெற்றியடைய வேண்டும் என்று முழு மனதுடன் நான் பிரார்த்தனை செய்கின்றேன்.