ராஜபக்ஷ அவர்களால் முன்வைக்கப்பட்ட ‘சுபீட்சத்தின் நோக்கு’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ‘புத்தாக்க இளைஞனை’ உருவாக்கும் பொறுப்பை முதன்மையாகக் கொண்ட பல்வேறு பொறுப்புக்கள் தேசிய இளைஞர் படையணியிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதென்பதனை இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும். அதற்கமைய, புதியதொரு கோணத்தில் தேசிய இளைஞர் படையணியின் அனைத்துச் செயற்பாடுகளையும் வகைப்படுத்துவதற்கும் நிலையான அபிவிருத்தியைக்கொண்ட நாட்டிற்காக முனைப்பான இளைஞர் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச் செலுத்துவதும் தற்போது தேசிய இளைஞர் படையணியின் முன்னணிப் பணியாக காணப்படுகின்றது.
தேசிய இளைஞர் படையணி தனது கடமைகளை உரிய முறையில் இனங்கண்டு நவீன முறையில் தயாரிக்கப்பட்டுள்ள பாடநெறி பரிந்துரைகளைப் போன்றே பாடநெறியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல முன்னோடிக் கருத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதற்கமைய அடிப்படை ஆளுமை விருத்தி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பாடநெறியில் இணைந்துகொள்ளும் பயிற்சிபெறுபவர்களுக்கு பாடநெறிக் காலப் பகுதியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப்பெற்றுள்ள நிறுவனமொன்றிலிருந்து ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களுக்கான உயர் சான்றிதழ்களை வழங்குதல், பயிற்சியின் பின்னர் தொழில் பயிற்சிக்குச் செல்லும் பயிற்சிபெற்றவர்களுக்கு பூரண புலமைப்பரிசிலொன்றுடனான தொழில் பயிற்சிக்கு அனுப்புதல் போன்ற சிறப்பு விடயங்கள் இதற்குள் உள்ளடங்குகின்றன.