Register Now

கௌரவ இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆசிச் செய்தி

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

நான் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக தேசிய இளைஞர் படையணியின்

பணிப்பொறுப்பு மற்றும் விடயப்பரப்பு சம்பந்தமாக முதலில் பாராட்ட விரும்புகின்றேன்.

உண்மையில் எங்கள் நாட்டினுள் செயற்படுத்தப்படும் போட்டித்தன்மையான பரீட்சைகளை

அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையில் பாடசாலைக் கல்வியை முடித்து சமூக

மயப்படுத்தப்படும் இளைஞர் யுவதிகள் அனேகமானவர்களுக்கு தேவையான சமூக திறன்கள்

முழுமை அடையாததன் காரணமாக சரியான இலக்கின்றி நடவடிக்கை மேற்கொள்வது சுலபமான

விடயம் ஆகும். இந்த நிலைமை நாட்டின் ஒட்டுமொத்த வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனில்

எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டை அபிவிருத்தி இலக்கை நோக்கி கொண்டு

செல்வதற்கு திறன்கள் முழுமை அடைந்த இளைஞர் யுவதிகளை கட்டியெழுப்பவேண்டும்.

இந்த நாட்டின் இளைஞர் தலைமுறையினர் மீது வாழ்க்கை திறன்களை வழங்குவதற்காக

தாபிக்கப்பட்ட ஒரே ஒரு அரச நிறுவனமாக தேசிய இளைஞர் படையணியை அடையாளப்படுத்த

முடிகின்றது. தேசிய இளைஞர் படையணியின் பணிப்பொறுப்பு இளைஞர் தலைமுறையினரின்

வாழ்க்கைத் திறன் விருத்தி, தொழில் திறன்களை விருத்தி செய்தல் மற்றும் விளையாட்டு,

அழகியற்கலை ஆற்றல்களை விருத்தி செய்தல் என காட்டப்பட்டுள்ளது. இம் மூன்று விடயங்கள்

மூலம் இளைஞர் தலைமுறையினருக்கு சேவை செய்வதற்கு தேசிய இளைஞர் படையணி

பல்வேறு வேலைத் திட்டங்களை செயல்படுத்தி வருவது மகிழ்ச்சிக்குரிய காரணமாகும்.

 

ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் ஆளுமையுடைய இளம் தலைமுறையினர் நாட்டிற்கு பெரிய

வளமாகும். தற்போதைய நெருக்கடியின் முன்னிலையில் சவால்களுக்கு தளராமல் முகம்

கொடுத்து வெற்றி பெறுவதற்காக ஒழுக்கம், தலைமைத்துவம், ஆளுமையுடன் கூடிய இளம்

தலைமுறையினரை உருவாக்குவது அத்தியாவசியமான காரணமாகும். அதற்காக தேசிய

இளைஞர் படையணிக்கு தேவையான பலம் மற்றும் தைரியம் கிடைக்க வேண்டும் என

பிரார்த்தனை செய்கின்றேன். விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் எனது

ஒத்துழைப்பை முழுமையாக நிறுவனத்தின் நோக்கத்தை வெற்றிபெற வழங்குவதற்கு

தயக்கமின்றி நடவடிக்கை மேற்கொள்வேன்.

ரொஷான் ரணசிங்க

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button