நாட்டின் உந்து சக்தியாகக் கொள்ளப்படும் இளைஞர்கள் தொடர்பான பொறுப்பை ஏற்று தேசத்தின் முன்னே தனது பொறுப்பு மற்றும் கடமையை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கமென்ற வகையிலும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.
தேசிய ரீதியிலான பெறுமதியை இனங்கண்டு, நாடு பூராவும் பரந்து வாழும் இளைஞர் யுவதிகளை ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் மென் திறன்களைக்கொண்டுள்ள ஆளுமை விருத்தியை ஏற்படுத்துவதில் முன்னணி நிறுவனமாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் காணப்படும் தேசிய இளைஞர் படையணியை அறிமுகஞ் செய்ய முடியும்.
தேசிய இளைஞர் படையணியினால் மேற்கொள்ளப்படும் பணிகள் ஊடாக எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் முயற்சி மாத்தரமே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே தங்களது நிறுவனத்தின் அனைத்துப் பணிகளும் சிறப்பாக அமைய வேண்டுமென மனமாரப் பிரார்த்திக்கின்றேன்!