தேசிய இளைஞர் படையணியில் இணைந்துகொண்டவுடன் நினைத்ததனை விடவும் வித்தியாசமான உலகமொன்று அதனுள் இருப்பதனை உணர்ந்தேன். இலங்கையின் சாதாரண கல்வி முறையின் OL, AL கற்ற எனக்கு வகுப்பறைக்கு வெளியே 09 செய்முறைப் பாடங்களை இளைஞர் படையணியில் கற்றுக்கொள்ள முடியுமாகியது. சமூகத்துக்கு முகங்கொடுப்பதெப்படி? தலைமைத்துவம்,பொறுமை, நேர முகாமைத்துவம், இலக்கை அடைதல், சமூகம் பற்றிய ஆய்வு போன்ற விடயங்களைப் போன்றே இலங்கையின் வரலாற்றையும் கற்க முடியுமாகியது.
2005 ஆம் ஆண்டில் எனது திருப்புமுனை தேசிய இளைஞர் படையணியாகும். எனது உள்ளத்தில் இருக்காத எனது பரம்பரையில் எவரும் செய்யாத தொழிலொன்றை நான் தெரிவு செய்தேன். அடிப்படை பயிற்சிக்கு மேலதிகமாக எமக்குப் பெற்றுத் தந்த தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம் போன்ற அறிவு காரணமாக வாழ்க்கையில் இந்தளவுக்கு என்னால் வர முடியுமாகியது.
தன்னுள் காணப்படும் திறமைகளைக் கண்டறிந்துகொள்ள முடியுமான ஒரே இடம் தேசிய இளைஞர் படையணியாகும். பல்கலைக்கழகம் செல்லவில்லை. ஆனாலும் அது பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனாலும் அந்தப் பல்கலைக்கழகம் எனும் உலகையும் தாண்டியதொரு நடை முறை உலகமொன்றே இதனுள் காணப்படுகின்றது. கீழே விழாமல் முன்னேற முடியாது. அந்த விழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதுவும் ஒரு பாடமென இங்கு கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.
OL, AL பரீட்சைகளுக்குப் பின்னர் உயர்கல்வி பற்றிய இலக்கொன்று இல்லாவிட்டால் வீடுகளில் வீணாக காலத்தைக் கழிக்க வேண்டாம். தேசிய இளைஞர் படையணியில் இணைந்துகொள்ளுங்கள். உங்களுக்குரிய ஒரே இடம் அதுவாகும். உங்களுக்கு அங்கு இலக்கொன்று உருவாக்கித் தரப்படும். அந்த இலக்கை டைந்துகொள்வதற்கான ஊக்குவிப்பு பெற்றுத்தரப்படும். அந்தப் பயணம் கஷ்டமானதும் கால தாமதமானதாக இருக்கலாம். ஆனாலும் ஒரு நாள் நீங்கள் வெற்றியடைவீர்கள். அப்படியானதொரு இருக்குமாயின் அது தேசிய இளைஞர் படையணி
மேனக்க மதுஷான் குலதுங்க
நிவித்திகல தேசிய இளைஞர் படையணி
Area Resident Manager_ Tear Drops Hotels