தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான புதிய சவாலுக்கு முகங்கொடுக்க முடியுமான தலைமைத்துவப் பண்புகள் மற்றும் பலம்மிக்க ஆளுமையையும் திறன்களையும் கொண்ட இளைஞர் சமூகத்திற்கு வழிகாட்ட வேண ்டிய சந்தர்ப்பத்தில் 2021 இன் 21 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தினூடாக கருத்திட்டமொன்றாக நிறுவப்பட்டு, 2003 ஒக்தோபர் மாதம் 10 ஆம் திகதி 1309/17 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு ‘01- 2003 ஆம் இலக்க இளைஞர் படையணிக்கான கட்டளைகள’ ஊடாக இளைஞர் படையணி நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய இளைஞர் படையணி அரச நிறுவனமொன்றாக 2002 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 17 ஆம் திகதி , ரீ.பீ.ஜாயா மாவத்தையில் ( தற்போதைய) மகாவலி கட்டிடத்தில் கர்னல் சன்ன குணதிலக்க அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சி பெறும் இளைஞர் யுவதிகள் “ரேஞ்சர் தலைவர்கள் (படையணித் தலைவர்கள்)” எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு முதலாவது பாடநெறி எம்பிலிப்பிட்டிய, எரமினியாய , ஹெய்யந்துடுவ மற்றும் ரன்டெம்பே போன்ற 04 ரேஞ்சர் தலைவர்கள் (படையணித் தலைவர்கள்) பயிற்சி முகாம்களில் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது பாடநெறியிலிருந்து பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகள் “ரேஞ்சர் (படையணி வீரர்) ” என அறிமுகஞ் செய்யப்பட்டு தற்போது நாடு பூராவும் மாவட்டங்கள் உள்ளடக்கப்படும் வகையில் 58 தேசிய இளைஞர் படையணி நிலையங்கள் வரை முறையாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆரம்பத்தில் ரேஞ்சர் தலைவர்கள் என ஆட்சேர்த்துக்க ொள்ளப்பட்ட சுமார் 100 பேர் தற்போது நாடு பூராவும் காணப்படும் பயிற்சி நிலையங்களில் அணி நடை மற்றும் ஒழுக்க ஆலோசகர்களாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.