சர்வதேச சமையற்கலை –தேசிய தொழில் தகைமை மட்டம் – IV
தொழில் : சமையற்காரர்
விடயப் பரப்பு
- சோஸ் வகைகளை தயாரித்தல்
- சாலட் / சுவையூட்டி / சிற்றுண்டிகளைத் தயாரித்தல்
- வெப்ப வீச்சில் உணவுகளை தயாரித்தல்
- சூடான / குளிர் பானங்களை தயாரித்தல்
- மீன் மற்றும் இறைச்சியை சமைப்பதற்கு தயார் செய்தல்
- இனங்களுக்குரிய உணவு வகைகளை தயாரித்தல்
- சூப் வகைகளை தயாரித்தல்
- இனிப்புக்கள் / இனிப்புணவுகளை தயாரித்தல்
உணவு பானங்கள் பணியாளர் பிரிவு – தேசிய தொழில் தகைமை மட்டம் – IV
தொழில் : உணவு பானங்கள் பணியாளர்
விடயப் பரப்பு
- உணவை பரிமாறுவதற்கு முன்னர் தயார்செய்தல்.
- உணவை பரிமாறுதல்
- வைன் பானத்திற்காக மேசையை தயார் செய்தல்
- அறைகளுக்கு உணவு பானங்களை வழங்குதல்
- பராமரிப்பு, சுத்திகரிப்பு, உடல் ஆரோக்கியம் மற்றும் சேவை நிலையத்தின் பாதுகாப்பு
- மதுபான வகைகளை வழங்குதல் மற்றும் பரிமாறுதல்
- மதுக்கூடங்கள் (பார்)செயற்பாட்டுடன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- கொக்டேல் வகைகளை தயாரித்தல் மற்றும் பரிமாறுதல்
- உணவு பரிமாறல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
பேஸ்ட்ரி பேக்கரி பிரிவு – தேசிய தொழில் தகைமை மட்டம் – IV
தொழில் : பேக்கர்
விடயப் பரப்பு
- பாண் மற்றும் பனிஸ் உற்பத்தி பற்றிய அடிப்படை நடவடிக்கைகள்
- பல்வேறு வகையான பாண் மற்றும் பனிஸ் உற்பத்தி
- பேஸ்ட்ரி உற்பத்தி
- கேக் மற்றும் குகீஸ் உற்பத்தி
- இனிப்பு வகைகள் உற்பத்தி
- வெதுப்பகத்தின் (பேக்கரி) சாதாரண செயற்பாடுகள் முகாமைத்துவம்
ஹோட்டல் தங்குமிடப் பராமரிப்பு – தேசிய தொழில் தகைமை மட்டம் – III
தொழில் : ஹோட்டல் தங்குமிடப் பராமரிப்பு
விடயப் பரப்பு
- காலியாகும் அறைகள் / தங்குமிட அலகுகளுக்கான சேவைகளை வழங்குதல்
- அறைகளுக்கான வெற்றிடம் / தங்குமிட அலகுகளுக்கான சேவைகளை வழங்குதல்
- ஓய்வறைகள் / தங்குமிட அலகுகளுக்கான சேவைகளை வழங்குதல்
- மாடிகள், விருந்தோம்பல் கொரிடோ, சேவைப் பகுதிகள், மாடிப் படிகள் மற்றும் பென்ட்ரி சேவையை வழங்குதல்.
- மினி மதுக்கூடங்களை கையாளுதல் சேவை
- சேவை நிலையங்களுடனான தொடர்பாடல்கள்
- சேவை நிலையங்களில் எழுத்தறிவு மற்றும் புள்ளிவிபரவியல் பயன்பாடுகள் பற்றிய பயிற்சி
- கூட்டுச் செயற்பாடுகள்
- தொழில் சார்ந்த சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய பயிற்சி
வரவேற்புப் பிரிவு – தேசிய தொழில் தகைமை மட்டம் – III
தொழில் : வரவேற்பாளர்
விடயப் பரப்பு
- தொடர்பாடல் அலுவல்கள் பற்றிய திறன் சார்ந்த பயிற்சி
- எழுத்தறிவு மற்றும் புள்ளிவிபரவியல் பயன்பாடுகள் பற்றிய பயிற்சி
- கூட்டுச் செயற்பாடுகள்
- தொழில் சார்ந்த சுகாதார பாதுகாப்பு மற்றும் சூழல் சார்ந்த செயற்பாடுகளைப் பின்பற்றுதல்.
- வாடிக்கையாளர் / விருந்தினர்களின் தேவைகளை நிறைவேற்றுதல்
- தொடர்பாடல் தொகுதியை கையாளுதல்
- தகவல்கள் மற்றும் சேவைகளை வழங்குதல்
- அறிக்கைகளைப் பேணிவரல்
- வாடிக்கையாளர் / விருந்தினர்களின் முறைப்பாடுகளை கையாளுதல்
நடாத்தப்படும் அனைத்துப் பாடநெறிகளும் இலவசமாக கற்பிக்கப்படுவதுடன், ஹோட்டல் பயிற்சிப் பாடநெறிக் காலப் பகுதியினுள் பயிற்சியைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு அடிப்படை ஆளுமை விருத்திப் பயிற்சி, தலைமைத்துவம், மென் திறன்கள் விருத்திப் பயிற்சி, சீன மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான அடிப்படை அறிவும் தேசிய இளைஞர் படையணி ஊடாக வழங்கப்படும். ஆரம்பத்திலிருந்து இன்று வரை இந்தப் பயிற்சிப் பாடநெறியைப் பயின்ற அனைத்துப் பயிற்சி பெறுபவர்களும் குறித்த துறையில் உயர் தொழில்களில் ஈடுபட்டவாறு தமது தொழிலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.
06 மாதங்கள் ( NVQ Level IV இற்காக 06 மாத கால தொழில்துறைப் பயிற்சி )