தேசிய இளைஞர் படையணியின் வருடாந்த நிகழ்ச்சி நாட்காட்டியில் முக்கியமான இடம் “பௌருஷாபிமாண” கலை மற்றும் அழகியல் விழாவிற்கு உரித்தானது. இது தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களில் சேவை புரியும் ஆளணி அங்கத்தவர்கள், பயிலுனர்களான இளைஞர் யுவதிகள் பங்குபற்றும் வருடாந்தம் மிகக் கோலாகலமாக நடைபெறும் கண்கவர் பிரமாண்டமான கலை மற்றும் அழகியல் விழாவாகும். அதன் உள்ளடக்கமாக தேசிய மற்றும் பல கலாச்சார நிகழ்ச்சிகள் முன்னிலைப் படுத்தப்படும். தேசிய இளைஞர் படையணியில் பயிற்சி பெறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த இளைஞர்களின் ஆக்கபூர்வமான திறன்களை வெளிக்காட்டும் “பௌருஷாபிமாண” விழாவிற்கு இணையாக, சுயாதீன நடுவர் குழுவால் தெரிவு செய்யப்படும், மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆளணி அங்கத்தவர்களை கௌரவிப்பதற்கும் மற்றும் அவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமும் இத்துடன் மேற்கொள்ளப்படும். பாடநெறி முடிவில் நடைபெறும் இந்த அலங்கார கலை விழாவை சிறப்பித்து அழைக்கப்பட்ட பிரமுகர்களும், விசேட பிரமுகர்களும், பார்வையாளர்களும் பங்கேற்பர்.