தேசிய இளைஞர் படையணியின் ஆறுமாத பிரயோக பயிற்சியின் முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுவதுடன் , அவ்வாறு வழங்கப்படுவது மிக ஆடம்பரமான மற்றும் வண்ணமயமான விழாவொன்றில் ஆகும். இந்த கௌரவமிக்க விழாவை பார்வையிடுவதற்காக பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகளின் பெற்றோர்களும் அழைக்கப்படுவார்கள்.
பாடநெறியை வெற்றிகரமாக முடிவு செய்ததன் பின்னரும், எதிர்கால தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்களையும், முயற்சியாண்மைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கும் தேசிய இளைஞர் படையணி நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த பாடநெறியில் காணப்படும் விசேட அம்சம் என்னவென்றால் பாடநெறியை பயில்வதற்கு இணையும் இளைஞர் யுவதிகளின் தொழில் முன்னோக்கிய தொழில் வாண்மை மேம்படுத்தபடுவதுடன், அவரின்/அவளின் நாளாந்த வாழ்க்கையை வாழ தேவையான தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கமுள்ள தனிநபர் மேம்பாடு பற்றி கவனம் செலுத்தப்படும். இது தொடர்பில் அரச பொறுப்புக்கூறும் நியதிச்சட்ட நிறுவனமான தேசிய இளைஞர் படையணி எப்போதும் முயற்சிப்பது இலங்கையின் எதிர்காலத்தை பொறுப்பேற்க காத்திருக்கும் இளம் தலைமுறையினரை தொழில்வாண்மையுடைய, சட்டத்தை மதிக்கும், தன்னம்பிக்கையுடைய, ஒழுக்கமுள்ள, அர்ப்பணிப்புள்ள, ஈடுபாடுடைய, திறன்களுடன் கூடிய, மிகத் திறமையான, அறிவுப்பூர்வமான சமுதாயமாக உத்தியோகபூர்வ முறையில் சமூக மயப்படுத்தல் ஆகும்.