Register Now

எமது ஆரம்பமும் சுருக்கமான விளக்கமும்

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேச​த்தை மீண்டும்  கட்டியெழுப்புவதற்கான  புதிய  சவாலுக்கு முகங்கொடுக்க  முடியுமான  தலைமைத்துவப் பண்புகள்  மற்றும்  பலம்மிக்க ஆளுமையையும்  திறன்களையும் கொண்ட   இளைஞர்  சமூகத்திற்கு  வழிகாட்ட வேண்டிய  சந்தர்ப்பத்தில்  2002  இன் 21 ஆம்  இலக்க  பாராளுமன்றச் சட்டத்தினூடாக  கருத்திட்டமொன்றாக  நிறுவப்பட்டு, 2003 ஒக்தோபர்  மாதம்  10 ஆம் திகதி    1309/17 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு  ‘01- 2003 ஆம் இலக்க இளைஞர்  படையணிக்கான  கட்டளைகள​’ ஊடாக இளைஞர் படையணி  நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய இளைஞர் படையணி அரச நிறுவனமொன்றாக 2002 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 17 ஆம் திகதி , ரீ.பீ.ஜாயா மாவத்தையில் ( தற்போதைய)  மகாவலி கட்டிடத்தில்  கர்னல்  சன்ன குணதிலக்க  அவர்களின் தலைமையில்  உத்தியோகபூர்வமாக  ஆரம்பிக்கப்பட்டது.    பயிற்சி பெறும்  இளைஞர்  யுவதிகள்  “ரேஞ்சர்  தலைவர்கள் (படையணித்  தலைவர்கள்)”  எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு  முதலாவது பாடநெறி எம்பிலிப்பிட்டிய, எரமினியாய, ஹெய்யந்துடுவ  மற்றும்  ரன்டெம்பே போன்ற  04  ரேஞ்சர்  தலைவர்கள் (படையணித்  தலைவர்கள்) பயிற்சி  முகாம்களில்  ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது பாடநெறியிலிருந்து பயிற்சி பெற்ற இளைஞர்  யுவதிகள்   “ரேஞ்சர் (படையணி வீரர்) ” என அறிமுகஞ் செய்யப்பட்டு  தற்போது  நாடு பூராவும்   மாவட்டங்கள் உள்ளடக்கப்படும்  வகையில்  58 தேசிய இளைஞர் படையணி நிலையங்கள் வரை   முறையாக  வளர்ச்சியடைந்துள்ளது.  ஆரம்பத்தில்  ரேஞ்சர்  தலைவர்கள்  என  ஆட்சேர்த்துக்கொள்ளப்பட்ட  சுமார்  100 பேர்  தற்போது  நாடு பூராவும்  காணப்படும்  பயிற்சி நிலையங்களில்  படைப் பயிற்சி  ஆலோசகர்களாக  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒழுக்கம், தலைமைத்துவம், ஆளுமை விருத்தி போன்ற  மூன்று  கருப்பொருள்களை  அடிப்படையாகக்கொண்டு  நடைமுறைப்படுத்தப்படும்  தேசிய இளைஞர் படையணி  ஏனைய  அனைத்து  இளைஞர்  வலுவூட்டல்களையும்  தாண்டியவாறு  சவால்களுக்கும்  முகங்கொடுக்க  முடியுமான  ஆளுமையைக்கொண்ட    பலம்மிக்க இளைஞர்   படையொன்றை   கட்டியெழுப்புவதற்காக  தெளிவானதும்,  முறையானதுமான  பல்வேறு நோக்கங்களுடன்  நடைமுறைப்படுத்தப்பட்டு  வருகின்றது.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button
Phone

Phone

Phone

Contact Us