தேசிய இளைஞர் படையணி தனது பயிலுனர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் முறையான பிரயோக பயிற்சியை வழங்கி அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் இரண்டும் குறித்த பாடங்கள் தொடர்பில் போதியளவு அங்கீகாரம் பெற்ற நாட்டின் பிரபல நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பிரதிபலன்கள் ஆகும். ஒவ்வொரு பயிற்சி நிலையங்களில் இருந்தும் தெரிவு செய்யப்படும் சிறந்த திறமையுடைய 30 பயிலுனர்க தெரிவு செய்து அனைவருக்கும் பூரண புலமைப்பரிசில் வழங்கி, பிரயோக ஆங்கில பாடநெறி மற்றும் தாம் விரும்பும் தொழில் துறையில் பயிற்சி பெறுவதற்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படும். அதற்கமைய வருடாந்தம் புலமைப் பரிசில்களை வெல்லும் மொத்த பயிலுனர்களின் எண்ணிக்கை 1740 ஆகும். இவ்வாறு உயர்கல்விக்கு மற்றும் மேலதிக தொழிற்பயிற்சிக்கு வாய்ப்பு கிடைக்கும் இளைஞர் யுவதிகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வாய்ப்புக்கள் கிடைக்கும் விதத்தில் தேசிய இளைஞர் படையணியுடன் தொடர்புபட்ட பல்வேறு தேசிய நிறுவனங்களுக்கு அனுப்பப்படுவர்.