பாடநெறி முடிவில் பயிற்சி பெற்ற இளம் தலைமுறையினர்களுக்கு தொழில் மற்றும் நாளாந்த வாழ்க்கையில் சவால்களை தன்னம்பிக்கையுடன் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.
ஆறு மாத கால பாடநெறி ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் ஆளுமையை இலக்காகக் கொண்டது.
மென்திறன் மற்றும் வாழ்க்கை திறன்கள் மேம்படுத்தப்பட்ட இளம் தலைமுறையினர் உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில் சந்தையில் குறிக்கோளுடன் செயற்படுவர்.
பாடநெறியின் மூலம் சங்கீதம், கலைநிகழ்ச்சிகள் மற்றும் பேச்சாற்றல் போன்ற மறைந்து காணப்படும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.
பயிலுனர்களுக்கு இலங்கையில் பிரபல்யமான புத்திகூர்மையான ஆளுமையுடைய தனிநபர்களுடன் பரஸ்பரம் பழகுவதற்கும், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில், ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் பாடநெறி சான்றிதழ்களை வழங்குவதுடன் குறித்த பாடங்களுக்கு உயர்கல்வி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.
ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய பாடநெறிகள் நடைபெறும் அனைத்து பயிற்சி நிலையங்களிலும் அதிநவீன வசதிகள் காணப்படுகின்றன.
தாய்மொழிக்கு மேலதிகமாக வேறு மொழிகளை கற்பதற்கு வாய்ப்புக்கள் வழங்குவதன் மூலம் பயிலுனர்களுள் வேறு மொழிகளை கற்க ஆர்வம் ஏற்படுத்தப்படுகின்றது.
ஒவ்வொரு நிறுவனங்கள் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற விசேட திறமை கொண்ட மாணவ மாணவியர் 30 பேர் கொண்ட மாணவர் குழு தனியார் துறையின் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுவதுடன், ஏனையவர்கள் அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்களுக்கு இணைக்கப்படுவர்.
பாடநெறியின் ஆறு மாத காலத்தினுள் ஏற்பாடு செய்யப்படுகின்ற பல்வேறு சமூகம் சார்ந்த கருத்திட்டங்களில் கலந்துகொள்ளும் பயிற்சி பெரும் பயிலுனர்கள் சமூகத்தைப் பற்றி தெளிவைப் பெற்றுக் கொண்டு அறிவு மற்றும் அனுபவத்தினால் சிறந்து விளங்குவர்.
விளையாட்டு ரசிகர்களுக்கு அவர்களின் கனவை நோக்கிச்செல்லும் எதிர்கால இலக்குகளை பூர்த்தி செய்து கொள்ள தேவையான ஒத்துழைப்பு விளையாட்டு அமைச்சின் மூலம் வழங்கப்படுவதுடன் அதற்காக அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
முயற்சியாண்மைக்கு அதிகம் ஆர்வம் காட்டும் இளைஞர் யுவதிகளுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் இணை நிறுவனமான சிறுகைத்தொழில் அபிவிருத்தி பிரிவின் அனுசரணையில் அறிவுறுத்தல்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு மற்றும் கடன் வசதிகள் வழங்கப்படும்.
தேசிய இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் பயிற்சிபெரும் காலத்தினுள் பல்வேறு வாய்ப்புகளும் வரப்பிரசாதங்களும் கிடைக்கும்.
இலவச சீருடை
பயிற்சியை வெற்றிகரமாக முடித்து அதன் பின்னர் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்திற்கு வழங்கப்படும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற சர்வதேச பௌத்த எகடமி (SIBA) மூலம் வழங்கப்படும் சான்றிதழ்.
காப்புறுதி
தமது பயிற்சியை இணையதளம் மூலம் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு இலவச சிம் கார்டு வழங்கப்படும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான வாய்ப்பு