இலங்கையின் இளைஞர் யுவதிகளை ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் ஆளுமையைக் கொண்டவர்களாகவும் அறிவு, திறன்கள் மற்றும் நல்ல மனப்பாங்குகளைக் கொண்டவர்களாக உருவாக்கும் நோக்கில் தேசிய இளைஞர் படையணியினால் மென் திறன்கள் அபிவிருத்திப் பாடநெறி தயாரிக்கப்பட்டுள்ளது.
மென் திறன்கள் அபிவிருத்தி என்றால் உணர்ச்சிபூர்வமான அறிவு, சமூகம் பற்றிய அறிவு, சரியான பண்பாட்டு நெறிமுறைகள், சமூக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைப் பண்புகள் மற்றும் இடைத் தொடர்புகள் திறன் என்பவற்றின் ஊடான வளர்ச்சியாகும். அதாவது, அன்றாட அலுவல்களை மேற்கொள்வதற்குத் தேவையான வாழ்க்கையுடன் இணைந்த விடயங்கள் சம்பந்தமான ஆற்றல்களை விருத்தி செய்தல் மற்றும் வழிகாட்டல்களை மென் திறன்கள் எனக் குறிப்பிட முடியும். ஒரு நபரின் ஆளுமை விருத்திக்காக மென் திறன்களை விருத்தி செய்துகொள்ளல் காலத்தின் தேவையாக இருக்கின்றது. பயிற்சி நிறுவனமொன்று என்ற வகையில் தேசிய இளைஞர் படையணி வாழ்க்கை மற்றும் தொழில் ஆகிய இரு பகுதிகளினதும் வெற்றியின் நிமித்தம் இந்த அடிப்படை பாடநெறி அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பாடநெறி தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களின் ஆலோசகர்களால் மேற்கொள்ளப்படுவதுடன், அனைத்து பயிற்சி பெறுநர்களுக்கும் பாடநெறியின் இறுதியில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள தேசிய இளைஞர் படையணியினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
தேசிய இளைஞர் படையணி வலைமைப்பில் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளும் பயிற்சி பெறுநர்களின் அடிப்படை பயிற்சியின் பின்னர் ஒவ்வொரு நிலையங்களிலிருந்தும் தெரிவு செய்யப்படும் 30 பேர்களைக் கொண்ட குழுவுக்கு மொத்தப் பாடநெறிக் கட்டணத்தையும் செலுத்துவதுடன் ஏனைய பயிற்சி பெறுநர்கள் பாடநெறிக் கட்டணமின்றி தொழில் துறையில் வெற்றிகரமான தொழில் பயிற்சியைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான பயிற்சி வாய்ப்புக்களுக்கு தேசிய இளைஞர் படையணியின் முழுமையான மேற்பார்வையின் கீழ் அனுப்பப்படுகின்றனர்.