இலங்கையின் இளைஞர் தொழில் வாய்ப்பின்மை தற்போது 28 % ஆக இருப்பதுடன் 2026 ஆம் ஆண்டாகும்போது 12% வரை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் அந்த 12% இனுள் 5% ஆன பங்களிப்பை வழங்குதல்.
2026 ஆம் ஆண்டாகும்போது வருடாந்தம் ஒரு இலட்சம் மாணவர்களை இலக்காகக்கொண்டு அந்த மாணவர்களின் வாழ்க்கைத்திறனை மேம்படுத்துவதற்கு தேவைப்படும் அடிப்படை பயிற்சிப் பாடநெறிகளை நடாத்துதல்.
தேசிய இளைஞர் படையணி ஊடாக மேற்கொள்ளப்படும் கருத்திட்டங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்படும் பொருளாதார செயற்பாடுகள் ஊடாக மொத்தப் பொருளாதாரத்திற்கு 0.1% ஆன பங்களிப்பை வழங்குதல்.
2026 ஆம் ஆண்டாகும்போது வருடாந்தம் பத்தாயிரம் இளைஞர் யுவதிகளை இலக்காகக்கொண்டு அவர்களுடைய இளம் வயதுப் பிரச்சினைகளை முகாமைப்படுத்திக்கொள்வதற்கு தேவையான வழிகாட்டல்களை பெற்றுக்கொடுக்க முடியுமான வகையிலான முறையொன்றை தாபித்தல்.