தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை வழங்கும் நோக்கில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இலங்கை பௌத்த கல்வி நிறுவகத்துடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தி அனைத்து பயிற்சி பெறுபவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பக் கல்வியைப் பயிலுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கு தேசிய இளைஞர் படையணியின் ஆலோசகர்கள் பாடநெறியின் கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பாடநெறியின் தரம் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இலங்கை பௌத்த கல்வி நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு 06 மாதங்களின் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
திறமைகளைக் கொண்டுள்ள பயிற்சி பெறுபவர்களுக்கு உயர் டிப்ளோமாவைப் பூர்த்தி செய்ததன் பின்னர் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
16 – 28 வயதுக்கிடைப்பட்ட இலங்கை இளைஞர் யுவதிகள்