Register Now

SUCCESS STORIES

2011 ஆம் ஆண்டில் நாத்தாண்டியா தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்துடன் இணைந்த வாழ்க்கையை வெற்றிகொண்ட நான் இன்று அச்சமின்றி சமூகத்தில் பலம்மிக்க ஒரு பெண்ணாக வாழ்கின்றேன். எனது வாழ்க்கையின் திருப்புமுனை 2011.01.15 ஆம் திகதியாகும். தேசிய இளைஞர் படையணியில் கழித்த காலப் பகுதி வாழ்க்கைக்கு அர்த்தத்தை தந்த காலப் பகுதியாகும். சமூகத்தில் நடந்தகொள்ள வேண்டிய விதம், அங்கு பெற்றுக்கொண்ட அறிவு, அனுபவம் என்பன இன்று என்னை சிறந்த பெண்ணொருத்தியாக மாற்றியதென இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு விடயத்தை திட்டமிடல், தலைமைத்துவம், குழுவாக செயற்படல், குழு உணர்வு போன்ற விடயங்களை வகுப்பறைக்கு வரையறுக்காமல் இணை பாட விதான செயற்பாடுகள் ஊடாக பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்குவதற்கு தேசிய இளைஞர் படையணி நடவடிக்கை மேற்கொள்கின்றது.

தேசிய இளைஞர் படையணி அடிப்படை பயிற்சியின் பின்னர் தாம் விரும்பும் தொழில் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்கு நிதமும் வழிகாட்டுதலை வழங்குகின்றது. அதனூடாகவே எனது வாழ்க்கையை சீராக்கிக்கொள்ள என்னால் முடியுமாகியது. இலக்கொன்றை அடைந்துகொள்ளும் பயணத்தின்போது அது நேர்த்தியானதாக ( smart ) இருத்தல் அவசியமாகும். அப்போது எமது இலக்கை எம்மால் இலகுவாக அடைந்துகொள்ள முடியும்.

பெண்ணொருத்தி என்ற வகையில் எவரிடமும் கையேந்தாமல் வாழுதல் தற்போது அத்தியாவசிய விடயமாக இருக்கின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவரதும் உதவி கிடைக்காத சந்தர்ப்பங்களுக்கு எம்மால் முகங்கொடுக்க வேண்டியேற்படலாம். அப்போது விழுந்து விடாமல் எழுந்து நிற்பதற்குத்​ தேவையான தன்னம்பிக்கையை நான் தேசிய இளைஞர் படையணி ஊடாக மாத்திரமே பெற்றுக்கொண்டேன். சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு சிறந்த வழி தன்னிடத்தில் தன்னம்பிக்கையே என எனக்கு கற்றுத் தந்து நான் இன்று இவ்வாறான ஒரு பதவியை வகிப்பதற்குக் காரணம் தேசிய இளைஞர் படையணியே எனக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

 

திலினி பீரிஸ்
வரைவாளர் ஆலோசகர் (draftman)
கொரிய இலங்கை தேசிய தொழில் பயிற்சி நிலையம்

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button