தேசிய இளைஞர் படையணியின் புதிய பணிப்பாளராக இலங்கை திட்டமிடல் சேவையின் சிறப்புத் தர அதிகாரியாக 30 வருடங்களுக்கு அதிகமான காலம் அனுபவம் உள்ள காமினி விக்ரமபாள அவர்கள் ஜனவரி மாதம் 23ஆம் திகதி, தேசிய இளைஞர் படையணியின் தலைமையகத்தில் தனது பணிகளை ஆரம்பித்தார்.
இலங்கையின் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாகவும், இளைஞர் படையணி பயிற்சி நடவடிக்கைகளை மேலும் முறைமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளதாகவும் அவர் தமது பணிகளை ஆரம்பித்தபோது தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே அவர்கள், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எறங்க குணசேகர அவர்கள், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டார அவர்கள் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், தேசிய இளைஞர் படையணியின் மேலதிக பணிப்பாளர்கள்,உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் தலைமையக ஆளணியினரும் பங்குபற்றினர்.