Register Now

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

Loading Events

« All Events

  • This event has passed.

“Victory Yes -2021′ தேசிய இளைஞர் படையணி வருட இறுதியில் சான்றிதழ் வழங்கும் வைபவம் 12 ஆம் திகதி, BMICH இல்…..

மார்கழி 12, 2021 @ 8:00 முப - 5:00 பிப

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்கள் இந்த அமைச்சின் அமைச்சர் பதவிக்கு நியமனம் பெற்றதன் பின்னர் அமைச்சின் கீழ் உள்ள இளைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களிலும் ஏற்படுகின்ற கவர்ச்சிகரமான மாற்றங்களுக்கு இணைவாக தேசிய இளைஞர் படையணி இதுவரை வெற்றிகரமான முறையில் நடாத்தி வந்த வருட இறுதி பெரிய விழாவாக கருதப்படும், இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் ‘Victory Yes-2021’ வைபவம் இம்முறை மிக கோலாகலமாக மற்றும் கவர்ச்சிகரமான முறையில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2021 டிசம்பர் மாதம் 12ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படவுள்ள இந்த வைபவத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் இளைஞர் படையணி பயிற்சி நிலையங்கள் 58 இல் அடிப்படை ஆளுமை விருத்தி மற்றும் தலைமைத்துவ பயிற்சியை கற்கும் பயpYனர்களின் ஆக்கபூர்வமான திறன்களை தேசிய மட்டத்தில் கொண்டு வந்து, அவர்களை கௌரவிப்பது இங்கு இடம் பெறுகின்றது.
தேசிய இளைஞர் படையணியின் மென் திறன் விருத்தி பயிற்சி பாடநெறியின் பெறுமதியை அதிகரிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஒன்றின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் என்ற இரண்டு பாடங்களுக்காக உயர் சான்றிதழை பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பயிலுனர்களுக்கு வழங்குவதும், விஷேட நபர்களை இலக்காகக் கொண்டு தேசிய இளைஞர் படையணி மூலம் மேற்கொள்ளப் படுகின்ற பயிற்சி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு அவர்களின் தொழில் வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கு தொழிற் பயிற்சிக்காக தேவையான முழுமையான புலமைப்பரிசில் 10 ஐ வழங்குவதும், விசேட கௌரவிப்பு விருது வழங்குவதும் இந்த வைபவத்தின் விசேட சந்தர்ப்பங்களாக அமைகின்றது.
நவீன இளைஞர் விருத்தி பயிற்சி நிறுவனங்களுள் தலை சிறந்து காணப்படும் தேசிய நிறுவனமாக அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி இம்முறையும் தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டு வருட இறுதி பெரிய விழாவை தற்சமயம் காணப்படும் தொற்றுநோய் நிலைமையின் முன்னே தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பேணி மிக கோலாகலமான முறையில் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துள்ளது

Details

Date:
மார்கழி 12, 2021
Time:
8:00 முப - 5:00 பிப

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button